கல்வி அமைச்சு செய்துள்ள புதிய மாற்றங்களின் விபரங்கள்:
• முதல் பகுதியான வேற்றுமை உருபுகள், 10 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. (முன்பு 12 மதிப்பெண்கள்). மேலும், பனுவலாக கொடுக்கப்பட்டது இப்போது தனித்தனி வாக்கியங்களாக கொடுக்கப்படுகிறது.
• இரண்டாம் பகுதியான செய்யுள் / பழமொழி 10 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. (முன்பு 12 மதிப்பெண்கள்)
• மூன்றாம் பகுதியாக, அடைமொழி / எச்சம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. (10 மதிப்பெண்கள்)
எ.கா நேற்று என் அம்மா செய்த பலகாரம் ___________________ இருந்தது.
(1) இனிப்பான
(2) இனிப்பு
(3) இனிப்பாக
(4) இனிப்புடன்
• நான்காம் பகுதியான முன்னுணர்வுக் கருத்தறிதல் 10 மதிப்பெண்களாக மாற்றப்பட்டுள்ளது. (முன்பு 14 மதிப்பெண்கள்). மேலும், இப்போது ஒவ்வொரு கேள்விகளுக்கான விடைகளை நான்கிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யும்படி மாற்றப்பட்டுள்ளது.
• ஐந்தாம் பகுதியான தெரிவுவிடைக் கருத்தறிதலின் கேள்விகள் 8 மதிப்பெண்களுக்கும், அதன் தொடர்பில் வரும் சொற்பொருள் 2 மதிப்பெண்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. (முன்பு 16 மதிப்பெண்கள்)
• ஆறாம் பகுதியான ஒலி வேறுபாடு 8 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது. (முன்பு 10 மதிப்பெண்கள்)
• ஏழாம் பகுதியான கருத்து விளக்கப்படம் 10 மதிப்பெண்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. (முன்பு 6 மதிப்பெண்கள்). நான்கு கேள்விகளில் மூன்று கேள்விகள் தேர்ந்தெடுக்கும் விதமாகவும்(MCQ), ஒரு கேள்வி விளக்கமாக எழுதும்படியும்(Open-ended) அமைக்கப்பட்டுள்ளது.
எ.கா : நடனப்போட்டியில் குழுவாக கலந்துக்கொள்ள எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? (4 மதிப்பெண்கள்)
• இறுதிப் பகுதியான சுயவிடைக் கருத்தறிதல் 22 மதிப்பெண்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது (முன்பு 20 மதிப்பெண்கள்). மேலும் சுயவிடைக் கருத்தறிதலின் கடைசிக் கேள்வி கருத்தறிதலின் வழி அறியப்பட்ட கருத்தை நண்பனுக்கு எழுதும் கடிதமாக அமைந்துள்ளது.
எ.கா :
நாகன் கூறியது பொய் என்பதை மன்னன் எவ்வாறு அறிந்து கொண்டான் என்பதை விளக்கி உன் நண்பனுக்கு குறிப்பு எழுது.
11 comments
Leave a Reply
You must be logged in to post a comment.
இது மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
thank you
thanks
true
thanks tamil cube