• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Tamil reading passage 5

ஒரு ஊரில் முத்தையாவும், சுப்பையாவும் வசித்து வந்தனர். முத்தையா நேர்மையானவன். எளிமையாக இருப்பான். சுப்பையா தந்திரக்காரனாக இருப்பான். ஒருநாள் முத்தையா, “ நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் என் கூரையைப் பிய்த்துக்கொண்டு தங்கம் கொட்டியது” என்று சுப்பையாவிடம் சொன்னான். அதைக்கேட்ட சுப்பையாவிற்கு பொறுக்கவில்லை. தானும் இதைவிட நல்லதாக ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நினைத்தான். உடனே, “நானும் ஒரு கனவு கண்டேன். அதில் பூமியைத் தோண்டும்போது பானை நிறைய தங்கம் கிடைத்தது” என்றான். இந்தக் கனவெல்லாம் உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும் என்று கூறிக்கொண்டு தங்கள் வேலையை செய்யத் சென்றனர்.

முத்தையா தன் வயலைத் தோண்டினான். அப்போது ஒரு பானை தட்டுப்பட்டது. உடனே அவன், “இது சுப்பையாவிற்கு வந்த கனவல்லவா? இது அவனுக்கே சொந்தம்” என்று நினைத்தான். சுப்பையாவிடம் பானையைக் கொடுத்தான். சுப்பையாவும், பேராசையுடன் பானையை வாங்கிச் சென்றான். வீட்டிற்குச் சென்று பானையைத் திறந்தான். அதிலிருந்து சில தேள்கள் எட்டிப்பார்த்தன. “ஆ” என்று கத்திக்கொண்டு உடனே மூடிவிட்டான். சுப்பையா ஆத்திரமடைந்தான். கோபத்துடன் பானையை எடுத்துக்கொண்டு அன்று இரவு முத்தையாவின் கூரை மேலிருந்து கொட்டினான். சில தேள்கள் விழுந்த பிறகு பானையிலிருந்து தங்கம் கொட்டியது. முத்தையா “என் கனவு பலித்துவிட்டது!” என்று மகிழ்ச்சியில் குதித்தான். சுப்பையா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.

கேள்விகள் :

1. இரண்டு நண்பர்களும் கண்ட கனவு என்ன?

2. சுப்பையா ஏன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்?

ஒலி வடிவம்:

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X