• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Tamil reading passage 3

ஓநாய் ஒன்றுக்குக் காட்டில் இரை எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அது உணவு தேடி ஊருக்குள் நுழைந்தது. அது ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு குடிசைப் பக்கம் வந்தது. குடிசைக்குள் மூன்று வயது சிறுவன் ஒருவன் அழுதுகொண்டு இருந்தான். பாட்டி, “அழக்கூடாது! அழுகையை நிறுத்து! இல்லாவிட்டால், உன்னை ஓநாயிடம் தூக்கிப் போட்டுவிடுவேன்!” என்று அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இதைக் கேட்ட ஓநாய் மகிழ்ந்துபோய், குடிசை ஓரமாகப் படுத்துக்கொண்டது. பாட்டி சிறுவனை எப்போது வெளியே தூக்கிப் போடுவார் என்று ஓநாய் நாவில் எச்சில் ஊறக் காத்துக்கொண்டு இருந்தது. இரவு வேளையும் வந்தது. ஓநாய் நம்பிக்கையுடன் படுத்திருந்தது.

அப்போது குடிசையின் உள்ளே இருந்த பாட்டி, “அழாதே! உன்னை ஓநாயிடம் போடமாட்டேன். அந்தக் கிழட்டு ஓநாய் வரட்டும். கம்பால் ஒரே அடி! அடித்துக் கொன்று போட்டுவிடுவோம்! கவலைப்படாதே!” என்று கூறிச் சிறுவனைத தேற்றினார்.

கேள்விகள்:

1. ஓநாய் ஊருக்குள் வந்த காரணம் என்ன?

2. ஓநாய் குடிசை ஓரமாகப் படுத்திருக்கக் காரணம் என்ன?

ஒலி வடிவம்:

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X