• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Oral exam practice 4 – சுத்தம்

உங்களுக்குக் கொடுக்கப்பட்டப் படக்காட்சியைப் பார்க்கவும். பின்பு அதில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பற்றிப் பேசி உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

சொல்வளம் :

1. பூங்கா 2. கை கழுவுதல் 3. பொம்மையைக் கடித்தல் 4. வகுப்பறை
4. சாப்பிடும் முன் 5. தலையில் பேன் 6. நோய் வராமல் 7. பெற்றோர்
8. சறுக்கு மரம் 9. மேல் கீழ் பலகை 10.பாடத்தில் கவனம் செலுத்த
முடியாமல்

எழுத்து வடிவம்:

இந்தக் காணொளியில் ஒரு விளையாட்டுப் பூங்கா காட்டப்படுகிறது. அங்கே நிறையச் சிறுவர் சிறுமியர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்ற இறக்கப் பலகை, ஊஞ்சல், சறுக்கும் பலகை மற்றும் பந்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒரு சிறுவன், பூங்காவில் விளையாடிவிட்டு வீடு திரும்புகிறான். சாப்பாட்டு மேசையில் நிறைய உணவுப் பதார்த்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவன் எதையும் சாப்பிடாமல் கைகால்களைக் கழுவச் செல்கிறான். விளையாடிவிட்டு வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்னரும் கைகளை கழுவுவது மிகவும் அவசியம்.

பின்பு தனது அறையில் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்கிறான். கட்டிலில் அமர்ந்திருந்த அவனுடைய தம்பி கையில் வைத்திருக்கும் பொம்மையை வாயில் வைத்துக் கடிக்கிறான். அதைக் கண்ட சிறுவன் தம்பிக்கு அருகில் சென்று பொம்மையை வாங்கிக் கொண்டு, அவ்வாறு செய்யக்கூடாது என்று தம்பிக்குச் சொல்கிறான். இது மிகவும் பொறுப்பான செயல் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் பொம்மையில் இருக்கும் தூசுகள் மற்றும் கிருமிகள் வாயில் வைத்துக் கடிக்கும் போது நம் வயிற்றுக்குள் சென்று விடும். பின்னர், உடற்கோளாறுகள் ஏற்படும்.

பின்பு இரவு உணவிற்கு முன்பு மீண்டும் ஒருமுறை கைகளை நன்கு கழுவிவிட்டு, சிறுவன் தன் பெற்றோர் மற்றும் தம்பியுடன் சாப்பிடுகிறான்.

பின்பு, பல் துலக்கிவிட்டு படுக்கைக்குச் செல்கிறான். இரவு தூங்குவதற்கு முன்பு பல் துலக்குவது மிகவும் நல்ல பழக்கம். நாமும் இதை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர், சிறிது நேரம் கதைப்புத்தகம் படித்து விட்டுத் தூங்குகிறான்.

சூரியன் உதித்ததும், கண் விழித்த சிறுவன், பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆயத்தமாகிறான். பள்ளிக்கூடப் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு தலையில் அரிப்பு எடுக்கிறது. தலையில் பேன்கள் இருப்பதை அவன் உணர்கிறான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், தன் அம்மாவிடம் தலையில் பேன்கள் இருப்பதைச் சொல்கிறான். பின்பு, அம்மா, தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். பின்பு தலையைத் துவட்டி நன்கு வாரி விடுகிறார். பின்பு, நகங்களை வெட்டி விடுகிறார்.

காலை, இரவு என்று இருமுறை பல் துலக்குதல், சுத்தமாகக் குளித்தல், நகங்களை அவ்வப்போது வெட்டுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டு நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால், நோயின்றி வாழலாம்.

கேள்விகள்

1. சுத்தத்தின் அவசியத்தைப்பற்றிக் கூறவும்.

2. சுத்தமாக இருப்பதற்கு நீ அன்றாடம் மேற்கொள்ளும் மூன்று
செயல்களை விவரித்துக் கூறவும்.

3. உன் வீடு அல்லது பள்ளிக்கூடம் சுத்தமாக இருப்பதற்கு உன்
பங்களிப்பு என்ன? விவரித்துக் கூறு?

ஒலி வடிவம்:

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X