• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Oral exam practice 3 – குப்பை போடுதல்

படக்காட்சியைப் பார்த்து அதிலிருந்து மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மனநிலையைத் தெளிவாக விவரிக்கவும். பின்பு அவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கூறவும்.

சொல்வளம் :

1. சாலை 2. வழிப்போக்கர் 3. இளையர் 4. சுண்ணாம்புக் கட்டி / எழுதுகோல் 6. வரைந்தார் 7.முழுவதும் நிரம்பி 8. குற்றம் 9. உறுத்தியது 10. தண்டனை

எழுத்து வடிவம்:

இந்தக் காணொளி ஒரு பரபரப்பான சாலையைக் காட்டுகிறது. அந்தச் சாலையில் வருவோர் போவோர் அனைவரும் சாலையில் பொறுப்பில்லாமல் குப்பையை வீசி எறிகிறார்கள். அங்கு அமர்ந்திருந்த இளையர் ஒருவர், நடப்பவற்றை உற்றுக் கவனித்து கொண்டிருக்கிறார்.

ஓர் ஆடவர், திண்பண்டம் ஒன்றை முடித்து விட்டு அதன் உறையை அப்படியே தூக்கி எறிகிறார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இளையர் தன் கையில் இருந்த சுண்ணாம்புக் கட்டியை வைத்து, அக்குப்பையைச் சுற்றி அவ்வடிவத்தை வரைகிறார். அடுத்தடுத்துப் போடப்படும் குப்பையைச் சுற்றியும் அவ்வாறே வரைகிறார். சிறிது நேரத்திற்குள் சாலையின் பெரும் பகுதியில் வீசப்பட்ட குப்பையைச் சுற்றி வரைந்திருந்தார்.

வேறொரு இளைஞர், கையில் இருந்த குடித்து முடித்த குளிர்பானக் குப்பைக் காகிதத்தை வீசி எறிய எத்தனிக்கிறார். கீழே வரையப்பெற்ற ஓவியங்கள் அவர் கண்ணில் படுகின்றன. ஏதோ ஒன்று அவரை உறுத்த, குளிர்பானக் காலி உறையை மடித்து, தன் கால்சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.

பின்னர், ஒரு குப்பைத்தொட்டியைக் கடந்து செல்லும் போது, பையில் மடித்து வைத்திருந்த குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சென்றார்.

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் மிகச் சாதாரணமாகத் தெரிந்தாலும், சிங்கப்பூரைச் சுத்தமான நாடாக அடையாளப்படுத்துவது, இந்தச் சிறிய செய்கைதான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒவ்வொருவரும் இந்தச் சின்ன செய்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு பெரிய சமுதாயச் சீர்திருத்தமே சாத்தியமாகலாம்.

கேள்விகள் :

1. சிங்கப்பூரில் குப்பை போடுவதற்கு அபராதம் விதிக்கப்படுவதைப்
பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

2. உன் நண்பன் சாலையில் குப்பையை வீசி எறிவதை நீ பார்த்தால்,
என்ன செய்வாய்?

3. சிங்கப்பூர் சுத்தமான நாடாக இருப்பதற்கு உன் பங்களிப்பு என்ன?

ஒலி வடிவம்:

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X