• LOGIN
    • No products in the cart.

Login

Register

Create an Account
Retrieve Password
Back to login/register
Back to Course

PSLE Oral exam practice 2

உங்களுக்குக் கொடுக்கப்பட்டப் படக்காட்சியைப் பார்க்கவும். பின்பு அதில் இடம்பெற்ற நிகழ்ச்சியைப்பற்றிப் பேசி உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

சொல்வளம் :

1. பேரங்காடி 2. ரொட்டி 3. மூதாட்டி 4. சிறுமி 5. பேரப்பிள்ளைகள்
6. பிறந்தநாள் 7. காசாளர் 8. உணவுப் பற்றுச்சீட்டு 9. இளைஞர்
10. உதவும் வட்டம்

எழுத்து வடிவம்:

இந்தக் காணொளி பேரங்காடியில் நடக்கும் ஒரு நிகழ்வைக் காட்டுகிறது. ஒரு வயதான பெண்மணி தன் பேரன் பேத்தியுடன் பேரங்காடிக்கு வருகிறார். மூதாட்டி தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வருகிறார். ரொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அவர்கள் வருகிறார்கள். சிறுமி தனக்குப் பிடித்த ரொட்டி வகையை எடுத்துக் கொடுக்கிறாள். மூதாட்டியோ அதன் விலையைப் பார்த்து விட்டு வேண்டாமென்று கூறி தள்ளுபடி விலையில் விற்கும் ரொட்டியை எடுக்கிறார். பேரன் தன் குடும்ப நிலை அறிந்து அதற்கேற்ற பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறான்.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு ஏதாவது சிறப்பாக வாங்கும்படி மூதாட்டி சிறுமியிடம் கூறுகிறார். சிறுமியும் மகிழ்ச்சியுடன் சென்று கேக் வாங்குகிறாள். ஒரு ஆடவர் அவளுக்கு குளிர்பதனப் பெட்டியிலிருந்து கேக்கை எடுக்க உதவுகிறார். பின் அவர்கள், பணம் செலுத்தும் இடத்திற்கு வருகிறார்கள். காசாளரிடம் மூதாட்டி தன்னிடம் இருந்த உணவுப்பற்றுசீட்டுகளைக் கொடுக்கிறார். அவர்கள் வாங்கிய பொருளுக்கு உண்டான பணம் அவர்களிடம் சற்றுக் குறைவாகவே இருந்தது தெரிய வந்தது. மூதாட்டி கேக்கை திருப்பி எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். சிறுமி தனக்கு அந்த கேக் வேண்டுமென்றும், தான் வேறு எதுவும் வாங்கவில்லை என்றும் கூறிகிறாள். அவளது பாட்டியோ, தற்போது பணம் இல்லாததால், அடுத்த முறை வாங்கிக் கொள்ளலாம் என்று சமாதானப் படுத்துகிறார். சிறுமியோ, ஒவ்வொரு முறையும் இப்படியே கூறுவதாக வருத்துடன் கூறி அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள். பேத்தியின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் பாட்டி வருந்துகிறார்.

சிறுமிக்கு கேக்கை எடுத்துக்கொடுத்த இளையர், காசாளரிடம் பணம் செலுத்தி அவர்கள் விட்டுச்சென்ற கேக்கை வாங்கிக் கொள்கிறார்.

பின், மூதாட்டியும் பேரப்பிள்ளைகளும், தங்கள் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்தளத்தில் நடந்து கொண்டிருந்த போது, அந்த இளையர் முன் வந்து, சிறுமியிடம் கேக்கைக் கொடுத்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
சிறுமி பாட்டியைப் பார்க்க, பாட்டியோ அவர் தங்களுக்காக வாங்கிக் கொடுக்க எந்த காரணமும் இல்லை என்று கூறி வாங்க மறுத்து விட்டார்.

இளையர், தன்னுடைய சிறுவயதில் அவர் ஆசைப்பட்ட கேக்கை வாங்க முடியாமல் அவர் அம்மா அதே நிலையில் இருந்த போது, ஒரு பெரியவர் அந்த கேக்கை வாங்கிக் கொடுத்ததாகவும், தற்போது தான் வாங்கிக் கொடுக்கும் நிலையில் இருப்பதால் தன்னுடைய உதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அன்பைப் புரிந்துக் கொண்ட மூதாட்டி அவரிடம் தொலைபேசி எண்ணை எழுதி தரச் சொன்னார். அவர் ஏதோ எழுதிக் கொடுத்து விட்டு, அச்சிறுமியிடம், பிறருக்கு உதவும் வாய்ப்புக் கிடைக்கும் போது தவறாமல் உதவி செய்ய வேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார். மூதாட்டி அவரின் பெயரைக் கேட்க, அவரோ “வரிசையில் இது என் முறை” என்று கூறிச் சென்றார்.

வீட்டுக்குச் சென்ற பாட்டியும் பேரப்பிள்ளைகளும், தாத்தாவிடம் விபரம் கூறினர். தொலைபேசி எண் எழுதிக் கொடுத்ததாகத் துண்டுச்சீட்டை முதியவரிடம் கொடுக்க, அவர் அதை பிரித்துப் படித்தார்.

“ஒரு சிறிய உதவி முடிவில்லா அலையை உருவாக்கும், அது மறுபடியும் உங்களை வந்தடையும்“ என்ற வாசகம் அவரை பின்னோக்கி இழுத்துச் சென்றது. அந்த இளையருக்கு உதவிய பெரியவர் அவர்தாம்.

கேள்விகள் :

1. கையில் பணமில்லாமல், பசியுடன் இருக்கும் யாரையாவதுப் பார்த்தால்
என்ன செய்யத் தோன்றும்?

2. ஏன் சிலர் ஏழைகளாகவும், சிலர் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்?

3. நீ பணக்காரர்களில் ஒருவராக இருந்தால், என்ன செய்வாய்?

ஒலி வடிவம்:

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X