• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Oral exam practice 1

படக்காட்சியைப் பார்த்து அதிலிருந்து மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மனநிலையைத் தெளிவாக விவரிக்கவும். பின்பு அவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கூறவும்.

சொல்வளம் :

1. ஒய்வு 2. தாதி 3. இருதய மாற்று சிகிச்சை
4. சக்கர நாற்காலி 5. அதிர்ச்சி 6. பயம் 7. மகிழ்ச்சி 8.குழப்பம்
9. காத்திருத்தல் 10. கவலை 11.மருத்துவர் 12. படுக்கை
13. உயிர்க்கொல்லி நோய் 14. புற்றுநோய் 15. களைப்பு
16. துக்கம் 17. வெறுப்பு 18. விபத்து 19. வலி 20. ஊன்றுகோல்

எழுத்து வடிவம்:

இந்தக் காணொளி ஒரு மருத்துவமனையைக் காட்டுகிறது. இங்கு பல்வேறு தரப்பினர் வெவ்வேறு உணர்ச்சிகளோடு காணப்படுகின்றனர்.

• இங்கு ஒரு ஆடவர், தன் மனைவியின் அறுவை சிகிச்சை முடிந்த பின், ஓய்வுக்காக வீட்டுக்குச் செல்கிறார். அவருடைய நிம்மதிப் பெருமூச்சு, அவரை அழுத்திக் கொண்டிருந்த மன அழுத்தத்தில் இருந்து அவர் விடுபட்டதை உணர்த்துகிறது. நமக்கு வேண்டியவர்கள் வலியில் துடிக்கும் போது அந்த வலி நமக்கும் தானே? அவர் முகத்தில் காணப்படும் நிம்மதி அவரின் மனைவி இப்போது நலமாக இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

• அடுத்து, ஒரு மூதாட்டி கிட்டதட்ட ஒரு மாத காலமாக இதயத்துக்காகக் காத்திருப்பதைக் காண்கிறோம். உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான உறுப்புகளில் இதயத்திற்குத்தான் முதலிடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருதய மாற்றுச் சிகிச்சை என்பது மருத்துவத் தொழில்நுட்பத்தில் போற்றப்பட வேண்டிய ஒன்று. தன் அறுவை சிகிச்சைக்கு, இதயம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிகிறது. இளையர்களாகிய நாம், உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

• ஒரு ஆடவர், சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடக்க முற்படுகிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடப்பதற்கு, ஒரு தாதி அவரை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு அவரை நடக்க வைக்க உதவுகிறார். எந்தவிதமான இரத்த உறவும் இல்லாத தாதி, தன்னை அவ்வாறு கவனித்துக் கொள்வதை நினைத்து மனம் உருகுகிறார் அந்த ஆடவர். நான் இந்தத் தாதிக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். தாதி, தன் கடமையை அன்புடன் செய்வதில் மனநிறைவு கொள்கிறார்.

மருத்துவர்கள், தாதிகள், சிகிச்சை பெறுபவர்கள் சிகிச்சைக்காக வருபவர்கள், உறவினர்கள், என்று மருத்துவமனை எப்போதுமே மக்கள் வந்து போகும் இடமாகவே இருக்கிறது.

கேள்விகள்:

1. மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுபவரை நீ சென்று
பார்த்திருக்கிறாயா? அப்போது உன் மனநிலை எப்படி இருந்தது?

2. மருத்துவத் துறை சார்ந்த தொழிலில் உனக்கு ஈடுபாடு உண்டா? ஏன்?

3. உறுப்பு தானம் மற்றும் இரத்த தானத்தைப் பற்றி உன் கருத்து என்ன?

ஒலி வடிவம்:

 

 

 

 

 

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Oral workshop on 9th AugustRegister
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X