• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

PSLE Model Tamil Composition 3

Sample Tamil composition 003 – For PSLE, P5 & P6

நம் வாழ்க்கையில் அன்றாடம் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றில் சில வேடிக்கையான சம்பவங்களாக இருக்கலாம். அவ்வாறு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் உன் மனதைத் தொட்டு இருக்கலாம். அவ்வாறு நடந்த ஒரு நிகழ்ச்சியை 100 சொற்களுக்குக் குறையாமல் விவரித்து ஒரு கட்டுரை எழுது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை நீ கட்டுரை எழுதுவதற்கு உதவியாகப் பயன்படுத்தலாம்.

  • உன் மனதை தொட்ட வேடிக்கையான நிகழ்ச்சி என்ன?
  • நிகழ்ச்சி எங்கே எப்போது நடந்தது?
  • இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருக்க என்ன காரணம்?
  • இந்நிகழ்ச்சியிலிருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்?

மறக்கமுடியாத ஒரு வேடிக்கையான சம்பவம்

அன்று விடுமுறை நாள். என் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வெளியே செல்லும்முன், பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றனர். அன்று என் நண்பன் என் வீட்டிற்கு வருவதாகக் கூறியிருந்தான். நான் அவன் வருகைக்காக வழி மேல் விழி வைத்து ஆவலுடன் காத்திருந்தேன். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான் மின்னல் வேகத்தில் சென்று கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

என் ஆவல் ஓடி மறைந்தது. என் கண்களில் பயம் தெரிந்தது. நான் ஒன்றும் புரியாமல் முழித்தேன். ஏன் இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்? என் பெற்றோருக்கு ஏதேனும் ஆபத்து நடந்திருக்குமோ போன்ற பல கேள்விகள் எனக்குள் தோன்றியது. காவலர் பேசத் தொடங்கினார். “இந்தப் பகுதியில் சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி ஒருவன் ஒளிந்திருக்கிறான். அதனால் நாங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனை செய்கிறோம்,” என்றார். மகிழ்ச்சியும், பயமும் என் மனதில் ஒன்றாக தோன்றியது. என் பெற்றொருக்கு ஒன்றும் இல்லை என்ற மகிழ்ச்சியும், என் வீட்டினுள் குற்றவாளி ஒளிந்திருப்பானோ என்ற பயமும் தோன்றியது. காவலர்கள் உள்ளே சென்று என் வீட்டில் சோதனை செய்தார்கள். என் வீட்டினுள் பழைய சாமான்கள் போடும் அறையைத் திறந்துப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்! என் கண்களால் என்னை நம்பமுடியவில்லை. அங்கே யாரோ ஒருவன் ஒளிந்திருந்தான்!

கனவா, நனவா என்று புரியாமல் திகைத்து நின்றேன். அவன் பார்ப்பதற்கு முரடன் போல் தாடி மீசையுடன் அழுக்கு உடையில் காட்சியளித்தான். காவலர்கள் அவனை அறையிலிருந்து வெளியே இழுத்து வந்தார்கள். “இவன் நாங்கள் தேடி வந்த குற்றவாளி இல்லை. இவனை உனக்குத் தெரியுமா?” என்று அவர்கள் கேட்டனர். நான் அவனை உற்றுப் பார்த்தேன். அவனை என்னால் அடையாளம் காண முடிந்தது. அவனைப் பார்த்து நான் வியந்து போனேன். அவன்தான் நான் எதிர்பார்த்திருந்த நண்பன். அவன் வேடத்தைக் கலைத்தான். “நான் மாறுவேடப் போட்டியில் கலந்துக்கொண்டேன். அதே வேடத்தோடு உன்னை ஏமாற்றுவதற்காக உன் பெற்றோர் இருக்கும் போதே இங்கு வந்து ஒளிந்துகொண்டேன்,” என்றான்.

காவலர்கள் அங்கிருந்துச் சென்றவுடன் நான் என் நண்பனை வெறிகொண்ட சிறுத்தையைப் போல் முறைத்துப் பார்த்தேன். என் வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத ஒரு வேடிக்கையான சம்பவம் இதுவே ஆகும்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X