• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

காலைப் பொழுது | Morning

காலைப் பொழுது | Morning – Composition phrases for PSLE, P5 & P6

1. சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பத் தொடங்கிய நேரம்.
2. சூரிய ஒளி மண்ணில் விழத் தொடங்கியது.
3. கதிரவன் தன் வேலையைச் செய்யப் புறப்பட்ட நேரம்.
4. கதிரவன் தன் பணிகளைத் தொடங்கிப் பொற்கரங்களை உலகிற்கு நீட்டிக் கொண்டிருந்தான்.
5. சந்திரன் வானிலிருந்து விடைபெறும் நேரம். சூரியன் தன் கதிர்களை இவ்வுலகிற்குப் பரப்பினான்.
6. சூரியன் தன் பொற்கரங்களை நீட்டி உலகிற்கு ஒளி தந்து கொண்டிருந்தான்.
7. சந்திரன் விடை பெற்றுக் கதிரவனுக்கு வழிவிட்டான்.
8. காலைப் பொழுது கதிரவன் பொன்னொளி வீசி எழுந்தான்.
9. புற்களில் உள்ள பனித்துளிகள் காலைச் சூரிய ஒளியில் உருகத் தொடங்கிய நேரம்.
10. செவ்வானத்தில் கதிரவன் உலா வரத் தொடங்கிய நேரம்.
11. கதிரவன் தன் செங்கதிர்களைப் புவியெங்கும் பரப்பினான்.
12. கதிரவன் கிழக்கு வானில் உதயமானான்.
13. காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது.
14. ஆதவன் தன் கடமையைச் செய்ய விரைந்து எழுந்தான்.
15. கதிரவனின் வருகையை எதிர்பார்த்த செடி கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ Learning Fair. Enjoy fun games & activities, and receive unbelievable discounts!Learn more
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X