• No products in the cart.

  • LOGIN

Login

Back to Course

இணைமொழிகள்

இணைமொழிகள் – Composition phrases for PSLE, P5 & P6

1. அக்கம் பக்கம் – இரவில் அக்கம் பக்கம் பார்த்துக் கவனமாக நடக்கவேண்டும்.
2. ஆடல் பாடல் – கலைநிகழ்ச்சியில் ஆடல் பாடல் அங்கம் நடைபெற்றது.
3. உற்றார் உறவினர் – மாமாவின் திருமணத்தில் உற்றார் உறவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
4. கண்ணும் கருத்தும் – பெற்றோர் தன் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள்.
5. சுற்றும் முற்றும் – இரவில் தனியாக வரும் பொழுது சுற்றும் முற்றும் பார்த்துக் கவனமாக வரவேண்டும்.
6. அரை குறை – எந்த செயலையும் அறைகுறையாகச் செய்து முடிக்கக்கூடாது.
7. அல்லும் பகலும் – நாம் அல்லும் பகலும் சிரமப்பட்டுப் படித்தால் தேர்வில் உச்சத் தேர்ச்சி பெறலாம்.
8. ஓட்டமும் நடையும் – பள்ளிக்குத் தாமதமானதால் அவன் ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.
9. சாக்குப் போக்கு– வீட்டுப் பாடம் செய்யாமல் இருக்க ராமன் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டே இருப்பான்.
10. நகமும் சதையும் – கண்ணனும், அவன் நண்பனும் நகமும் சதையும் போல் இருப்பார்கள்.
11. ஆடி அசைந்து – வெளியே கிளம்பும் பொழுது என் தங்கை ஆடி அசைந்து மெதுவாகக் கிளம்புவாள்.
12. சிந்தாமல் சிதறாமல் – நாம் பாடங்களை படிக்கும் பொழுது நம் கவனம் சிந்தாமல் சிதறாமல் படிக்கவேண்டும்.
13. நன்மை தீமை – நாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்யவேண்டும்.
14, நோய் நொடி – நாம் நோய் நொடியின்றி வாழ உடற்பயிற்சி செய்யவேண்டும்.
15. பேச்சு மூச்சின்றி – விபத்தில் அடிப்பட்ட செல்வி பேச்சு மூச்சின்றிக் கிடந்தாள்.
16. அருமை பெருமை – நம் மொழியின் அருமை பெருமைகளை அறிந்து நாம் அதனைக் கற்க வேண்டும்.
17. உயர்வு தாழ்வு – நாம் நம் நண்பர்கள் இடையே உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது.
18. கல்வி கேள்வி – சிறந்த குடிமகனாக இருக்க நாம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்.
19. கள்ளங்கபடு – நாம் நம் நண்பர்கள் இடையே கள்ளங்கபடு இல்லாமல் பழக வேண்டும்.
20. மூலை முடுக்கு – அடையாள அட்டையை காணாமல் ரவி வீட்டின் மூலை முடுக்கு எல்லாம் தேடினான்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017 Comsys Technologies, Singapore. All rights reserved. Tamilcube.com     Terms      Contact Us    
Join Tamilcube GOLD™ PSLE Tamil Compo & Compre workshop on 10th Sep 2017 [1st Sep session is FULL HOUSE]Register
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register
X